மீண்டும் ஹஜ் யாத்திரை 29ல் தொடக்கம்… தயாராகும் மெக்கா!

 

மீண்டும் ஹஜ் யாத்திரை 29ல் தொடக்கம்… தயாராகும் மெக்கா!

சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது மீண்டும் தொடங்கியுள்ளது. புனித யாத்திரை பயணிகளை வரவேற்க மெக்கா முழு வீச்சில் தயாராகி வருகிறது.

மீண்டும் ஹஜ் யாத்திரை 29ல் தொடக்கம்… தயாராகும் மெக்கா!
கொரோனா பாதிப்பு காரணமாக மெக்கா கடந்த மார்ச் மூடப்பட்டது. இதனால் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் இஸ்லாமியர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற 29ம் தேதி ஹஜ் புனித யாத்திரை தொடங்கும் என்று சௌதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் சௌதி அரேபியாவில் உள்ளவர்கள் மட்டுமே புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியக் குடிமக்கள் மற்றும் சௌதி அரேபியாவில் வசிப்பவர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்கலாம். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஹஜ் யாத்திரை 29ல் தொடக்கம்… தயாராகும் மெக்கா!புனித பயணிகள் வருகையையொட்டி மெக்கா முழுவதும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மசூதி மற்றும் சுற்றுப் புற பகுதியை தூய்மை செய்ய 18,490 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அங்கு அவசர உதவிக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கும் விரைவில் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.