Home இந்தியா கொரோனா எதிரொலி: ஹஜ் பயணம் ரத்து! 

கொரோனா எதிரொலி: ஹஜ் பயணம் ரத்து! 

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் விமான சேவை தடைபட்டதால் சவுதி அரேபிய அரசு கடந்த மார்ச் 12-ம் தேதியே ஹஜ் புனிதத் தலங்களை மூடிவிட்டது. இதுவரை இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் தொடங்குவது குறித்து எந்த நாட்டுக்கும் சவுதி அரேபியா அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயணம் நடக்காது என்று எண்ணி பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தாங்களாகவே முன்வந்து ஹஜ் புனிதப் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டன.

ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரேபியா அரசு எந்தவிதமான தகவலும் அளிக்காததால் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் புனிதப்பயணம் செல்லப் பணம் செலுத்தி இருந்தார்கள். இதேபோல் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டியும் அறிவித்திருக்கிறது.

Most Popular

கஷ்டத்தை போக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமேதி ராமா!

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி உலகமே மிக கடுமையான சூழலில் சிக்கித் தவிக்கின்றது. ராம நாமம் கஷ்டத்தை போக்கி அமைதியையும், ஆனந்தத்தையும் தரக்கூடியது. மந்திரங்களில் எளிமையான ஒரு மந்திரம்...

தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ரவுத் சந்திப்பால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.. சிவ சேனாவை நம்ப முடியாது- காங்கிரஸ்

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் சந்தித்து பேசியது அம்மாநில அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிவ சேனா நம்பதகுந்தல்ல என காங்கிரஸ் குற்றம்...

பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற விரும்பும் பஸ்வான் கட்சி?

பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி விரும்புவதாக தெரிகிறது. அதேசமயம் இது தொடர்பாக...

ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி… களைகட்டிய பீகார் தேர்தல்

ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!