முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

 

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை.

இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

உண்மையில் தலை முடி என்பது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புள்ள ஒரு விஷயம். உடல் ஆரோக்கிய குறைபாட்டைச் சரி செய்தாலே முடிகொட்டும் பிரச்னையை எளிதாக எதிர்கொள்ளலாம்.

முடிகொட்டும் பிரச்னையைத் தீர்க்கக் கூடிய உணவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். (யூடியூப் வலைதளம் வழியாகவும் இவர் உணவுப் பரிந்துரை செய்துவருகிறார்)

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

முடிகொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. புரதச் சத்து குறைபாடு, இரும்புச் சத்து பற்றாக்குறை, விட்டமின் குறைபாடு, ஹார்மோன் சிக்கல் என நிறைய காரணங்கள் இருக்கின்றன.

நாம் இன்றைக்கு புரதச் சத்து குறைபாடு மற்றும் இரும்புச் சத்து பற்றாக்குறை காரணமாக முடி கொடுவதைத் தடுக்க என்னென்ன உணவு வகைகள் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

புரதச் சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியம். அதில் உள்ள கெரட்டின் என்பது முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. எனவே புரதச் சத்தை அதிகரிக்க வீடுகளில் சாம்பார், பருப்பு குழம்பு வைக்கும்போது பயன்படுத்தும் பருப்பின் அளவை அதிகரிக்க வேண்டும்.

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

ஒவ்வொருவர் சாப்பிடும்போது அவர்களுக்குத் தேவையான பருப்பு கிடைக்கும் விதத்தில் பருப்பின் அளவை அதிகரிக்க வேண்டும். பருப்பு சுண்டல் செய்து சாப்பிடுவது பலன் நல்ல அளிக்கும்.

பாலில் புரதச் சத்து உள்ளது. அதனால், ஒருநாளைக்கு 400 மிலி பால் உங்கள் உடலில் சேர்வதுபோல பார்த்துக்கொள்ளவும். ஒரு கப் தயிர் சாப்பிடவும் செய்யலாம்.

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களிலும் புரதச் சத்து இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உணவு வகைகள் செய்து சாப்பிடலாம்.

அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன், சிக்கன் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். முட்டை எனும்போது வாரத்திற்கு அதிகமாக மூன்று நாட்கள்தான் செய்வார்கள். சிக்கன் அல்லது மீன் என்பது வாரத்திற்கு ஒருமுறைதான் வழக்கமாக இருக்கும்.

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

அதனால், பருப்பு, முட்டை, மீன், சிக்கன், சிறுதானியம் என்பது சுழற்சியாக இருப்பதுபோல ஒரு வாரத்துக்கு திட்டமிட்டுக்கொள்ளலாம்.

60 கிலோ மனிதருக்கு ஒருநாளைக்கு 60 கிராம் புரதச் சத்து தேவை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளவும்.

முடிகொட்ட இன்னொரு காரணம் இரும்புச் சத்துப்பற்றாக்குறை.

கீரைகளில் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது. குறிப்பாக, முருங்கை கீரையில். அதனால் வாரத்திற்கு மூன்று நாட்கள் கீரையை உங்கள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளவும். முருங்கை கீரை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதும்.

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

அதேபோல, பேரிட்சை பழம், மாதுளம் பழம், முழு தானியங்களிலும் இரும்புச் சத்து இருக்கிறது. உலர் பழங்கள், பட்டானி ஆகியவற்றைச் சாப்பிடுவதாலும் இரும்புச் சத்து கூடும். அதனால், அவற்றையும் அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது.

முடி வளர்வது எப்படி எப்போது நடைபெறுமோ முடி கொட்டுவது அப்படி நடக்கும். எனவே, அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை முறையாகக் கடைப்பித்தால் இதனால் ஏற்படும் முடி கொட்டுதலை தவிர்க்க முடியும்’ என்கிறார்.

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் சேர்க்க வேண்டியவை இவைதான்

என்ன சாப்பிடுகிறோம் என்பது நாம் பழக்கிக்கொள்வதுதான். அதனால் உடலுக்கு ஆரோக்கியமானவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதை நம் பழக்கிக்கொள்வோம். உடல் ஆரோக்கியத்துடன் தலை முடி கொட்டும் சிக்கலையும் சரி செய்துகொள்ள முடியும்.