முகமூடி அணிந்து ஏடிஎம்மை ஹேக் செய்து ரூ. 42.39 லட்சம் கொள்ளை

குருகிராமின் சுஷாந்த் லோக்கில் ஒரு வணிக வளாகத்திற்குள் அமைந்துள்ள ஏடிஎம் ஒன்றில் இருந்து முகமூடி அணிந்த இரண்டு ஆண்கள் ரூ .42.39 திருடியதாகக் கூறப்படுகிறது.

ஹாலிவுட் படங்களில் வருவது போல முகமூடி அணிந்த இரண்டு ஆண்கள் ஒரு ஏடிஎம் அறைக்குள் நுழைந்து ரூ .42.39 லட்சம் கொள்ளையடித்துள்ளனர். அந்த நபர்கள் குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த சம்பவம் மே 23 அன்று சுஷாந்த் லோக்கில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்தது. மே 20 அன்று அந்த ஏடிஎம்மில் ரூ.28 லட்சம் ஏற்றப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, இயந்திரம் வேலை செய்யாததால் சில “தொழில்நுட்ப தவறு” இருப்பதாக நிறுவனத்திற்கு புகார் வந்தது.
ஏடிஏம்மை பராமரிக்கும் நிறுவனம் தனது நிர்வாகியை ஏடிஎம் ஆய்வு செய்ய அனுப்பியது. பரிசோதனையில், ஏடிஎம்மில் ரூ .42,39,100 காணவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சி.சி.டி.வி கேமராவில் இருந்து மீட்கப்பட்ட காட்சிகளில், முகமூடி அணிந்த இரண்டு ஆண்கள் நுழைந்து கேமராவின் லென்ஸை சேதப்படுத்தி பின்னர் பணம் கொள்ளையடித்துள்ளனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றத்தைச் செய்தவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கவில்லை. அதற்கு பதில் ஒருவித “ஹேக்கிங் சாதனத்தை” பயன்படுத்தி உள்ளனர். அடையாளம் தெரியாத சந்தேக நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 380 (வசிக்கும் வீட்டில் திருட்டு) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...