ஹ…ஹா… ஹி…ஹீ… இது உம்மணாம்மூஞ்சிகளுக்காக!

 

ஹ…ஹா… ஹி…ஹீ… இது உம்மணாம்மூஞ்சிகளுக்காக!

சிரிப்பு… வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. இதன் உண்மையை அறிந்த சென்னை போன்ற பெருநகரங்களைச் சேர்ந்த பலர் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் ஒன்று கூடி விதம் விதமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். `ஹ… ஹ…ஹா…. ஹி….ஹி… ஹெ…ஹெ….ஹா…. ஹா…’ என ரைமிங்காகச் சிரிக்கிறார்கள். இதைப்பார்ப்பவர்களுக்கும் சிரிப்பு வரலாம். அப்படிச் சிரிப்பு வந்தால் சிரித்து விடுங்கள், ஒருவேளை நோய் இருந்தால் விலகிப் போய்விடும்.

ஹ…ஹா… ஹி…ஹீ… இது உம்மணாம்மூஞ்சிகளுக்காக!புத்துணர்வு:
`சிரித்து சிரித்து பெருத்துப்போ’ என்றும் ஒரு பழமொழி இருக்கிறது. உடல் குலுங்குமளவு நன்றாகச் சிரிப்பவர்கள் சிரிக்காதவர்களைவிட நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள் என்பதே அதன் பொருள். ஆகவே, இனிமேல் சிரிக்காதவர்களெல்லாம் சிரியுங்கள்.

நன்றாகச் சிரிப்பதால் தசைகள், குறிப்பாக வயிறும் மார்பும் போதுமான அளவு இளைப்பாறுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. நுரையீரலில் நன்றாக காற்றோட்டம் ஏற்படும். இதயம் புத்துணர்வு பெறும். உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து எல்லா உறுப்புகளையும் நன்றாக செயல்பட வைக்கும்.

ஹ…ஹா… ஹி…ஹீ… இது உம்மணாம்மூஞ்சிகளுக்காக!செரிமானம்:
சிரித்துக்கொண்டே சாப்பிடுகிறவர்களுக்கு உணவு நன்றாகச் செரிக்குமாம். அதேவேளையில் நிறைய சிந்தித்துக்கொண்டே சோர்வாகவும், மன அமைதியில்லாமலும் சாப்பிடுபவர்களுக்கு அவ்வளவு நன்றாகச் செரிப்பதில்லையாம். சிரிப்பு குடலை ஊக்குவிக்கும். நிறைய சிரிப்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை அவ்வளவாக இருக்காது.

மூளையின் அடிப்பகுதியில் பட்டாணி அளவில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்படும். அப்போது உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் சரியான அளவு உண்டாக சிரிப்பு துணைபுரிகிறதாம். அத்துடன் மூளையின் மிக நுட்பமான ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி மூளையை தெளிவுபெறச் செய்கிறது, இந்த சிரிப்பு.

ஹ…ஹா… ஹி…ஹீ… இது உம்மணாம்மூஞ்சிகளுக்காக!உம்மணாம்மூஞ்சிகள்:
உண்மையான சிரிப்பு வயிற்றின் உட்பகுதி சுரப்பிகளை மென்மையாக வருடிவிட்டு அவற்றின் சுரப்புகளைப் பெருக்குமாம். குறிப்பாக இரைப்பை, குடல், கணையம் போன்ற உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் ஊக்குவிக்கப்படும் என்று டாக்டர் ஜேம்ஸ் ஜே.வால்ஷ் என்பவர் தனது ஆய்வின் முடிவில் சுவையான பல தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, இனிமேல் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் உம்மணாம்மூஞ்சிகள் வாய் விட்டுச் சிரித்து, நோய்களை வெல்லுங்கள்.