• April
    05
    Sunday

Main Area

Main



தல 60 அப்டேட்: கதை பிடித்ததால்.. மீண்டும் அதே இயக்குநருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஜித்!

 தல அஜித்
தல அஜித்

சென்னை: தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித் தற்போது பாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் பட ரீமேக்கில்நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை என்று பெயரிட்டுள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அதில் தல அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். 

nerkonda

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து அஜித்தின் 60-வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளார். அதையும் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார். 

இந்த நிலையில் அடுத்தப் படத்துக்காக ஹெச்.வினோத் சொன்ன கதை, அஜித்துக்கு திருப்தியாக இல்லை என்றே கூறப்பட்டது. இதனால் அந்த படத்தின் பேச்சு வார்த்தை பாதியில் நின்றது.

தற்போது ஹெச்.வினோத் சொன்ன மற்றொரு கதை தல அஜித்துக்கு பிடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையொட்டி படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித்திடம் இருந்து கிரீன் சிக்னல் வந்துவிட்டதால் போனி கபூர் மகிழ்ச்சியில் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

மேலும் 'தல60வது' படத்தை அடுத்த வருடம், அஜித் பிறந்த நாளன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.