‘மண்ணின் மைந்தன்’ ஹெச்.ராஜா காரைக்குடியை கைப்பற்றுவாரா? – மக்களின் தீர்ப்பு என்ன? #karaikudi

‘மண்ணின் மைந்தன்’ ஹெச்.ராஜா காரைக்குடியை கைப்பற்றுவாரா? – மக்களின் தீர்ப்பு என்ன? #karaikudi

காரைக்குடி தொகுதியைச் சொன்னவுடன் அனைவருக்கும் ஹெச்.ராஜாவின் குரலோ, முகமோ நினைவுக்கு வரலாம். காரைக்குடியும் ஒருவிதத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகிவிட்டது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோற்றாலும் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட ராஜாவுக்கு பாஜக வாய்ப்பளித்திருக்கிறது. 2001ஆம் ஆண்டு தேர்தலில் காரைக்குடியிலிருந்து எம்எல்ஏவாக வெற்றிபெற்றிருக்கிறார்.

‘மண்ணின் மைந்தன்’ ஹெச்.ராஜா காரைக்குடியை கைப்பற்றுவாரா? – மக்களின் தீர்ப்பு என்ன? #karaikudi

அந்தக் காரணத்துக்காக மீண்டும் சீட் கொடுத்திருக்கலாம். மண்ணின் மைந்தன் ஹெச்.ராஜாவுக்காக போராடி அந்த இடத்தைப் போராடி பாஜக பெற்றிருப்பதாக தகவல். இவரை எதிர்த்து காங்கிரஸின் மாங்குடியும், அமமுகவில் தேர்போகி பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இவர்களை மட்டும் குறிப்பிடக் காரணம் இங்கு இருமுனை போட்டியே நிலவுகிறது என்பது கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது. 1971ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை நடைபெற்ற 11 தேர்தல்களில் அதிமுக 4 முறை, திமுக 3 முறை, காங்கிரஸ் 2 முறை, தமிழ் மாநில காங்கிரஸும் பாஜகவும் தலா ஒரு முறை வென்றுள்ளன.

‘மண்ணின் மைந்தன்’ ஹெச்.ராஜா காரைக்குடியை கைப்பற்றுவாரா? – மக்களின் தீர்ப்பு என்ன? #karaikudi

மண்ணின் மைந்தன் ஹெச்.ராஜாவுக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்களா? அல்லது மீண்ண்டும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு வாய்ப்பளிப்பார்களா? இந்தக் கேள்விகளோடு காரைக்குடி மக்களை அணுகினோம். அங்கே யாரும் மூன்றாவது அணிக்கு வாய்ப்பளிக்க தயாராக இல்லை. பெரும்பாலோனோர் அதிமுக அல்லது திமுக என்றே கூறினர். மூன்றாவது அணியில் சீமானுக்கும் டிடிவிக்கும் சொற்ப அளவில் வாக்குகள் விழும் என்று தெரியவந்துள்ளது. ஆகவே நேரடிப் போட்டி மாங்குடிக்கும் ராஜாவுக்கும் தான். திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் சம அளவில் மக்கள் ஆதரவளிக்கின்றனர். ஆகையால் காரைக்குடியில் யார் ஜெயிப்பார்கள் என்பது இழுபறியாக இருக்கிறது.

‘மண்ணின் மைந்தன்’ ஹெச்.ராஜா காரைக்குடியை கைப்பற்றுவாரா? – மக்களின் தீர்ப்பு என்ன? #karaikudi

நடுநிலையாக இருக்கும் முள் அப்படி நகர்ந்தால் மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெறும். அந்த முள் இப்படி நகர்ந்தல் ஹெச்.ராஜா மீண்டுமொரு முறை சட்டப்பேரவைக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது. ரகசியங்கள் மக்கள் விரல் நுனிகளில் ஒளிந்திருக்கின்றன. மே 2ஆம் தேதி ரகசியங்கள் ஊரறியும். (கருத்துக்கணிப்பு குறித்த முழுமையான தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்)