தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்

 

தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்

பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தலைவர் நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவில் இணை செயலாளர்கள், துணைச் செயாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த புதிய பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஹெச். ராசா பெயர் நீக்கப்பட்டுள்ளது.

தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்

புதிய நிர்வாகிகளுக்கு தேசிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர்கள் ராமன் சிங், வசுந்தர ராஜ சிந்தியா உள்ளோட்டோர் தேசிய நிர்வாகிகளாக இடம் பிடித்துள்ளனர். பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்

ஹெச்.ராஜா போன்றவர்கள் தமிழகத்தில் இருந்து தேசிய தலைவரகளாக இடம்பெற்றிருந்த நிலையில், தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து தேசிய தலைவர்களை நியமிக்காதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.