தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்க துணிச்சல் உண்டா? திமுக அரசுக்கு ஹெச்.ராஜா கேள்வி

 

தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்க துணிச்சல் உண்டா? திமுக அரசுக்கு ஹெச்.ராஜா கேள்வி

இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அவதூராக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்க துணிச்சல் உண்டா? திமுக அரசுக்கு ஹெச்.ராஜா கேள்வி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் வடக்குறுக்கி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமித்து அதில் மண்டபம் கட்டியுள்ளதாக புகார் எழுந்த நிலையில், அந்த இடத்தை பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில் தற்போது 4 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கோவில் இடங்களை மீட்க உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு குப்பையில் போட்டு விட்டது. பிரதமரை இழிவாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நான் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். ஒவ்வொரு ஊரிலும் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த தகவலை தரும்படி கேட்டுள்ளேன். தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா? அர்ச்சகர்களை ஆட்சியாளர்கள் எப்படி நியமிக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.