‘காங்கிரஸ் ஆட்சியை விட இது கம்மி தான்’ : ஹெச்.ராஜாவின் அதிரடி பேட்டி!

 

‘காங்கிரஸ் ஆட்சியை விட இது கம்மி தான்’ : ஹெச்.ராஜாவின் அதிரடி பேட்டி!

மத்திய பாஜக அரசு இந்தியாவின் தரத்தை உயர்த்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பண மதிப்பிழப்பில் ஆரம்பித்து தற்போது பெட்ரோல், சிலிண்டர் விலையேற்றம் வரை அனைத்துமே மக்களுக்கு நெருக்கடியை அளிக்கும் திட்டமாகவே இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92ஐ எட்டியிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.800ஐ எட்டியிருக்கிறது.

‘காங்கிரஸ் ஆட்சியை விட இது கம்மி தான்’ : ஹெச்.ராஜாவின் அதிரடி பேட்டி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதற்கு பின்புலத்தில் பாஜக அரசு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியோ இவை எல்லாவற்றுக்கும் காரணம் முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் என சாடிவிட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் விலையேற்றம் குறைவாக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கூட காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என்றும் காங்கிரஸ் ஆட்சியில் 3.9% ஆக இருந்த விலை ஏற்றம் பாஜக ஆட்சியில் 2.6 % ஆக குறைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.