திமுக கொள்ளையர்கள் கூட்டம்- ஹெச். ராஜா

 

திமுக கொள்ளையர்கள் கூட்டம்- ஹெச். ராஜா

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “திமுக வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இல்லாத பிரச்சனையை உருவாக்கி மக்களை குழப்பி வருகிறது. விவசாய சட்டங்கள் குறித்து பொய் செய்திகளை பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு திட்டத்தால் ஒரு விவசாயி பாதிக்கப்பட்டால் கூட அதனை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது.

வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் தமிழக விவசாயிகள் திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட தீய சக்திகளை புறக்கணியுங்கள். விவசாய சட்டம் குறித்து பொய் செய்திகள் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக தேர்தலை கருத்தில் கொண்டு இல்லாத பிரச்னைகள், குழப்பங்களை ஏற்படுத்த நினைக்கிறது. வேளாண் சட்ட திருத்த மசோதாவில் மண்டி நீக்கப்படும் என எங்கும் தெரிவிக்கவில்லை, குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். மத்திய அரசு என்ன செய்தாலும் அதனை மு.க.ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். வேளாண் சட்ட திருத்த மசோதாவை உண்மையான விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2ஜி தீர்ப்பு விரைவில் வர உள்ளதை ஆ.ராசா ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். திமுக கொள்ளையர்கள் கூட்டம்.

திமுக கொள்ளையர்கள் கூட்டம்- ஹெச். ராஜா

1970 ஆம் ஆண்டு விவசாய மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்திய விவசாயிகளை சுட்டு கொலை செய்த திமுக, இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. விவசாயிகளை காப்பாற்றவே வேளாண் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை விவசாயிகள் வேரோடு அகற்றுவார்கள். 1996இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தவர் ரஜினிகாந்த், அன்றிலிருந்து திமுகவை ரஜினி எதிர்த்ததில்லை.

ரஜினி ரசிகர்கள் அதிகம் வாக்களிப்பது திமுகவிற்கு என்பதால் ரஜினி கட்சி துவங்குவதன் மூலம் திமுகவிற்கு ஆபத்து ஏற்படும், அமித்ஷா வருகையால் ரஜினி கட்சி துவங்கவில்லை, ஏற்கனவே 2017ல் கட்சி துவங்குவதாக அறிவித்ததால் தற்போது கட்சி துவங்கியுள்ளார். ரஜினி சுயமாக சிந்திக்க கூடியவர் அவரைப்பற்றி குறைத்து மதிப்பிட கூடாது” எனக் கூறினார்.