நிச்சயம் எனக்கு பாஜகவில் புதிய பொறுப்பு வழங்குவார்கள்: ஹெச். ராஜா

 

நிச்சயம் எனக்கு பாஜகவில் புதிய பொறுப்பு வழங்குவார்கள்: ஹெச். ராஜா

பாஜகவில் எனக்கு புதிய பொறுப்பு வழங்குவார்கள் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவிலில் பேசிய ஹெச். ராஜா, “ஆறு வருடங்களாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவி வகித்து விட்டேன், தற்போது தலைமை எனக்கு வேறு பொறுப்பை வழங்குவார்கள். அது எங்கள் கட்சி விவகாரம், இது குறித்து யாரும் கவலை பட தேவையில்லை, அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பது அந்த கட்சியின் உள் விவகாரம், அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனையில் பாஜக தலையிடாது.

நிச்சயம் எனக்கு பாஜகவில் புதிய பொறுப்பு வழங்குவார்கள்: ஹெச். ராஜா

அய்யாக்கண்ணு போன்ற போலி விவசாயிகளை கையில் வைத்துக் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக போராட்டங்களை நடத்தி மக்களை திசை திருப்ப நினைப்பது வேடிக்கையானது. விவசாயிகளின் நலனுக்காக தான் மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது,காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இனிமேல் ஆட்சிக்கு வர முடியாது என்பதால்தான் வேளாண் சட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குப்பையில் தூக்கி எறிவோம் என ராகுல் காந்தி கூறு வருகிறார், அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள், காங்கிரஸ் கட்சிக்கு முதலில் தலைவரை தேர்ந்தெடுக்கட்டும் ,அதன் பின்பு ஆட்சிக்கு வருவதை பற்றி அவர்கள் பேசலாம்.

உபியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கண்டனத்துக்கு உரியது தான். அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து விட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதை அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்கின்றனர். அவர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று என்ன செய்யப் போகிறார்கள்,. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்கத்தான் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரையும் அரசு அனுமதிக்கவில்லை” எனக் கூறினார்.