இன்னும் 3 மாதங்களில் திமுகவின் தலையெழுத்து மாறும்..!பாஜகவின் அரசியல் கணக்கு

 

இன்னும் 3 மாதங்களில் திமுகவின் தலையெழுத்து மாறும்..!பாஜகவின் அரசியல் கணக்கு

2021 சட்டப்பேரவை தேர்தலில் போராடினாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ஹெச் ராஜா, “கொரோனா விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது, அவர் சொன்ன வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், எதிர்க்கட்சி தலைவருக்கான தகுதியே இல்லாத நபர் ஸ்டாலின், 2021 தேர்தலில் போராடினாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது.

இன்னும் 3 மாதங்களில் திமுகவின் தலையெழுத்து மாறும்..!பாஜகவின் அரசியல் கணக்கு

தமிழகத்திலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டிய கட்சி திமுக. திமுக மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்து விட்டது, இன்னும் மூன்று மூன்று மாத காலத்தில் 2ஜி வழக்கின் தீர்ப்பு வர உள்ளது, அந்த தீர்ப்பு வந்ததும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் சிலர் தண்டிக்கப்படுவார்கள், இதன்பின் திமுகவின் நிலை வெட்ட வெளிச்சம் ஆகிவிடும், மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கை இழப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன்.

2021 தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும், பாஜக அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. 2021 ஆம் ஆண்டு தேர்தலை இந்தக் கூட்டணி வலிமையாக சந்திக்கும், கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது தமிழக அரசு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். இந்த முறைகேட்டில் மத்திய அரசின் தவறு ஏதும் இல்லை” என தெரிவித்தார்.