அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; ஹெச்.ராஜா பேட்டி!

 

அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; ஹெச்.ராஜா பேட்டி!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலர் ஹெச்ராஜா, அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலையை தொடங்கியுள்ளன. காங்கிரஸ் திமுகவுடன், பாஜக அதிமுகவுடனுமே கூட்டணி அமைக்கும் என்றாலும் அதிமுக கூட்டணியில் பிரச்னை நிலவுவதாக கூறப்பட்டது. குறிப்பாக ஹெச் ராஜாவுக்கும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஜெய்குமாருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; ஹெச்.ராஜா பேட்டி!

அண்மையில், அமைச்சர்கள் அத்துமீறி பேசினால் அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்னை வரும் என்றெல்லாம் ஹெச் ராஜா கூறியிருந்தார். விநாயகர் சிலை வைக்க அரசு அனுமதி அளிக்காததில் இருந்தே இந்த குழப்பங்கள் எல்லாம் தொடங்கியது. இந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என ஹெச் ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; ஹெச்.ராஜா பேட்டி!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றும் கூட்டணியில் புரிதல் இல்லாததால் ஜெயக்குமார்மற்றும் செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் கருத்து தெரிவிகின்றனர் என்றும் கொரோனா தடுப்பு பணியை ஸ்டாலின் விமர்சிப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் கூறியுள்ளார்.