“டெல்லிக்கு மட்டுமில்ல; தமிழ்நாட்டுக்கும் பாஜக ராஜா தான்”.. ஹெச்.ராஜா பேட்டி!

 

“டெல்லிக்கு மட்டுமில்ல; தமிழ்நாட்டுக்கும் பாஜக ராஜா தான்”.. ஹெச்.ராஜா பேட்டி!

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. வழக்கம் போல தற்போது அதிமுகவுடனும் திமுகவுடனும் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவுடன் பாஜகவும் தேமுதிகவும் கூட்டணி அமைக்கும் என்றாலும், தற்போது பாஜகவும் அதிமுகவும் அதிமுகவுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிட தொண்டர்கள் விரும்புவதாக கூறினார்.

“டெல்லிக்கு மட்டுமில்ல; தமிழ்நாட்டுக்கும் பாஜக ராஜா தான்”.. ஹெச்.ராஜா பேட்டி!

அதே போல விநாயகர் சிலை, இ பாஸ் உள்ளிட்ட விவகாரங்களால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். இதனிடையே பாஜக தேசிய செயலர் ஹெச் ராஜாவுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஹெச் ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் மட்டும் இல்லை தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என்றும் பாஜக கூட்டணியில் தான் அதிமுக இருப்பதாகவும் கூறினார். மேலும், காதலால் தற்கொலை செய்து கொள்வதால் காதலை தடை செய்ய முடியுமா? என ஆன்லைன் வகுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.