darbar
  • January
    17
    Friday

Main Area

Main



தொண்டன் கூட தலைவராவது பாஜகவில் மட்டுமே சாத்தியம்!- ஹெச். ராஜா

H Raja
H Raja

தொண்டன் கூட தலைவராவது பாஜகவில் மட்டுமே சாத்தியம் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மணவெளி தொகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா கட்சியும் வாரிசு அரசியல் செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஆபத்து. காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தை விட்டால் யாருமில்லையா? திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியை விட்டால் யாரும் இல்லையா? அந்த கட்சியில் வெளியில் இருந்து யாராவது தலைவராக வரமுடியுமா? என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார். 

தொண்டன் கூட தலைவராவது பாஜகவில் மட்டுமே சாத்தியம் எனக்கூறிய ஹெச். ராஜா, தேசத்துரோகி என்ற நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட வைகோ, தனது கட்சிக்கென்று ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் திமுக தயவோடு வெக்கம் கெட்டுபோய் எம்பியாக ஆகவுள்ளார்.

 

2018 TopTamilNews. All rights reserved.