சட்டமன்ற தேர்தலில் போட்டியா?- ஹெச் ராஜா பதில்

 

சட்டமன்ற தேர்தலில் போட்டியா?- ஹெச் ராஜா பதில்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கூட்டத்தில் பாஜவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, “விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும், பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றுதான் வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்காக போலி விவசாயிகளை வைத்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பாதாம், பிஸ்தா, வாசிங்மிஷின், மசாஜ் சென்டர் ஆகிவற்றை வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யார் விவசாயம் செய்யவில்லையோ அவர்கள் தான் போராட்டம் செய்து வருகிறார்கள்.எதிர்க்கட்சிகளின் பண பலத்தின் பின்னால் போலியான போராட்டம் நடைபெற்றுவருகிறது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியா?- ஹெச் ராஜா பதில்

சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் சட்டத்தை வாபஸ் வாங்க முடியாது. எஸ்.ரா .சற்குணம் பிரதமரை அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிக்கிக்கிறேன். இவரை குண்டர் சட்டத்தில் முதலமைச்சர் கைது செய்ய வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்று தெரிவித்தார்