darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



தமிழகத்தில் பகுத்தறிவு தோற்றது! ஆன்மீகம் வென்றது- ஹெச். ராஜா பெருமிதம்..

H Raja
H Raja

வருண ஜெபம் நடத்திய பிறகே தமிழகம் முழுவதும் மழை பெய்துள்ளது என பாஜக தேசிய செயலாளார் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா,  “தமிழகத்தில் பகுத்தறிவு தோற்றுள்ளது. ஆன்மீகம் வென்றுள்ளது. அதனால்தான் யாகம் செய்த பிறகு மழை பெய்துள்ளது. தி.மு.க ஆட்சியின் போது 620 ஏரிகள் காணாமல் போக செய்ததால் தற்போது சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 

இனிமேலும் தமிழகத்தில் தி.மு.க இந்தி எதிர்ப்பு வேஷம் போட பா.ஜ.க அனுமதிக்காது.தமிழகத்தில் இருந்து பா.ஜ.கவிற்கு அதிக  எம்.பிக்களை கொடுத்திருந்தால் தற்போது மத்திய அமைச்சரவையில் 8-ல் இருந்து 10 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பார்கள்” என்று கூறினார். 
 

2018 TopTamilNews. All rights reserved.