• July
    22
    Monday

Main Area

Main



கமலை போல ஒரு ஒழுக்கம் கெட்ட வரை பார்க்க முடியாது- ஹெச். ராஜா

H Raja
H Raja
Loading...

கமலை போல ஒரு ஒழுக்கம் கெட்டவரை பார்க்க முடியாது, கமல் தீய நோக்கத்தோடு கலவரம் வேண்டுமென்ற நோக்கத்தோடு பேசிவருகிறார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

துரை கரிமேடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “கமல்ஹாசன் நான் இந்துக்களைப் பற்றி பேசவில்லை என்று கூறுகிறார். அவர் கூறியதில், முதலில் உள்ள சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தான் பேசினார். சுதந்திரத்திற்கு பின் நவ காளி கலவரத்தை கமல் கலவரம் இல்லை என்கிறாரா? காந்தியை கொலை செய்த போது முதலில் கண்டித்தது ஆர்.எஸ்.எஸ் தான். அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் உள்ள இந்துக்கள் நிம்மதியாக வாழக் கூடாது என்ற எண்ணத்தில் கமல் பேசியுள்ளார். கமல் போல ஒழுக்கம் கெட்ட வரை பார்க்க முடியாது. கமல் தீய நோக்கத்தோடு கலவரம் வர வேண்டும் என்று தான் கமல் பேசியுள்ளார். பள்ளப்பட்டி பகுதியில் இதுவரை ஒரு காவல் நிலையம் உள்ளதா?

கமல் ஒரு தீய சக்தி, இந்து விரோதி. திரைப்படங்களில் தொடர்ந்து இந்து மதங்களுக்கு எதிரான கருத்துகளை தான் கூறி வருகின்றார்.அரவக்குறிச்சியில் உள்ள சில இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு 100 கோடி இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். எந்த கடவுளையும் தவறாக பேசினால் தவறு தான்” என்று கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.