பாஜக தேர்தல் கூட்டணி குறித்து ஹெச்.ராஜாவின் பதில்!

 

பாஜக தேர்தல் கூட்டணி குறித்து ஹெச்.ராஜாவின் பதில்!

பாஜகவின் தேர்தல் கூட்டணி குறித்து தலைமை தான் முடிவெடுக்கும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடக்கிவிட்டன. அதனால் தற்போது எல்லா கட்சிகளிலும் கூட்டணி பிரச்னை நிலவி வருகிறது. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாஜக மற்றும் தேமுதிகவில் பிரச்னை நிலவுவதாக கூறப்படுகிறது. விநாயகர் சிலை, இ பாஸ் முறை என பல விவகாரங்களால் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அதே போல, கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பாஜக தேர்தல் கூட்டணி குறித்து ஹெச்.ராஜாவின் பதில்!

இதனிடையே, பாஜகவின் தேசிய செயலர் ஹெச் ராஜாவுக்கும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஜெயகுமாருக்கும் பிரச்னை மூண்டது. விநாயகர் சிலை விவகாரத்தில் அரசை பற்றி ஹெச் ராஜா விமர்சித்ததால் இந்த பிரச்னை எழுந்துள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என கூறினார்.

இந்த நிலையில் கூட்டணி குறித்து ஹெச் ராஜா வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் கூட்டணி பற்றி பாஜக தலைமை தான் முடிவெடுக்கும் என கூறினார்.