“திமுக தேர்தல் அறிக்கைலாம் ஒரு அறிக்கையா?” – கரித்துக்கொட்டிய ஹெச். ராஜா

“திமுக தேர்தல் அறிக்கைலாம் ஒரு அறிக்கையா?” – கரித்துக்கொட்டிய ஹெச். ராஜா

சில தினங்களுக்கு முன் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்களை சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தன. ஆனால் அதிமுகவோ திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து விமர்சனம் செய்துவருகிறது. குறிப்பாக பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம் செய்துவருகிறார்கள். அந்த வகையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் செய்திருக்கிறார்.

“திமுக தேர்தல் அறிக்கைலாம் ஒரு அறிக்கையா?” – கரித்துக்கொட்டிய ஹெச். ராஜா

காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தேவகோட்டையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அம்மா உணவகத்தின் பெயரை கலைஞர் உணவகம் என மாற்றி வைப்பது தேர்தல் அறிக்கையா? நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் அளிப்போம் என்று முன்னர் திமுக தெரிவித்தது. வழங்கினார்களா?

“திமுக தேர்தல் அறிக்கைலாம் ஒரு அறிக்கையா?” – கரித்துக்கொட்டிய ஹெச். ராஜா

திமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. அந்தத் தேர்தல் அறிக்கை டிஷ்யூ பேப்பர் போன்றது. திமுகமக்களுடன் விளையாடிப் பார்க்க நினைக்கிறது. மக்கள் அவர்களை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது திமுகவில் புதிய சிந்தனைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்றார்.