எச்-1பி விசா: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதிவரை தற்காலிக நிறுத்தம்

 

எச்-1பி விசா: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதிவரை தற்காலிக நிறுத்தம்

வாஷிங்டன்: தகுதி அடிப்படையில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க குடியேற்றம் வழங்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்-1பி விசா முறையை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க வேண்டும் என்று தன்னுடைய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு இறுதி வரை எச்-1பி மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கும் சீர்திருத்த குடியேற்ற முறையை டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

எச்-1பி விசா: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதிவரை தற்காலிக நிறுத்தம்

அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகளால் அதிகளவில் இந்திய ஊழியர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் இந்திய ஊழியர்கள் ஹெச்1-பி விசா மூலம் பணியாற்றி வருகின்றனர். புதிய விசாக்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக சில தினங்களில் டொனால்டு ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் சுமார் 5 லட்சத்துத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.