ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்கள் இயங்க அனுமதி: முதல்வர் அறிவிப்பு

 

ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்கள் இயங்க அனுமதி: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்துச் செல்கிறது. பாதிப்பு அதிகமாக இருந்த பகுதியான சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பினும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடவும், கடைகள் 7 மணி வரை செயல்படலாம் என்பன உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகம் முழுவதிலும் ஜிம் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்கள் இயங்க அனுமதி: முதல்வர் அறிவிப்பு

இந்த நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்கள் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும் ஜிம்கள் இயங்குவதற்கான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வழிகாட்டு செயல்முறைகளை ஜிம்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.