உடற்பயிற்சிக் கூடங்களில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்!

 

உடற்பயிற்சிக் கூடங்களில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்!

வரும் பத்தாம் தேதி உடல் உடற்பயிற்சிக் கூடங்களில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியீடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்கள் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும் ஜிம்கள் இயங்குவதற்கான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வழிகாட்டு செயல்முறைகளை ஜிம்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஜிம்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:

  • கண்டைன்மெண்ட் பகுதியில் இருக்கக்கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடியே இருக்கும்.
  • உடற்பயிற்சி செய்யும்பொழுது முகக்கவசம் அணிய வேண்டாம் அதே நேரத்தில் முகத்திற்கு பிளாஸ்டிக்கால் ஆன ஷில்ட்டு பயன்படுத்தலாம்.
  • உடற்பயிற்சிக்கு மேற்கொள்ள வருபவர்கள் அவர்களது பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும் உடற்பயிற்சி செய்யக் கூடியவர்கள், அதற்கான இயந்திரங்கள் மற்றும் பொருட்களை தொட்டு பயன்படுத்தும் முன் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • உடற் பயிற்சி நிலையத்தை திறக்கும் போதும் மீண்டும் மூடும்போதும் முழுவதுமாக கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • உடற்பயிற்சி நிலையங்களில் ஏசி பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அதன் வெப்பநிலை 27 டிகிரி லிருந்து 30 டிகிரி மட்டுமே இருக்க வேண்டும்.
  • 15 வயதிற்கு கீழ் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனுமதி கிடையாது, மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை.
  • உடற்பயிற்சி மையங்களில் அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய அனுமதி
  • ஒருவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை மற்றவர் பயன்படுத்தும் முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பின்னரே அந்த உபகரணங்களை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும்