தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும் அதற்கான சில வழிமுறைகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

அதில், உடற்பயிற்சி செய்யும்பொழுது முகக்கவசம் அணிய வேண்டாம் அதே நேரத்தில் முகத்திற்கு பிளாஸ்டிக்கால் ஆன ஷில்ட்டு பயன்படுத்த வேண்டும் என்றும் உடற் பயிற்சி நிலையத்தை திறக்கும் போதும் மீண்டும் மூடும்போதும் முழுவதுமாக கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் உடற்பயிற்சிக்கு மேற்கொள்ள வருபவர்கள் அவர்களது பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் போன்ற நெறிமுறைகளை அரசு அறிவித்தது.

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது. 4 மாத கால இடைவெளிக்குப் பிறகு அரசின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டிருக்கிறது.