திருச்சியில் ரூ.20 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

 

திருச்சியில் ரூ.20 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

திருச்சி

திருச்சியில் தனியார் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 5 பேரை கைதுசெய்தனர்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பாலக்கரை பென்சர் காலனி மற்றும் எடத்தெரு பகுதிகளில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மற்றும் பாலக்கரை காவல் நிலைய வோலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் சோதனை நடத்தினர்.

திருச்சியில் ரூ.20 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

இந்த சோதனையின்போது, குடோன்களில் விற்பனை செய்வதற்காக 55 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,800 கிலோ ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை விற்பனை செய்வதற்காக பதுக்கியது தொடர்பாக, பூமிநாதன், ஹரிஹரன், வடிவேல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு டாடா ஏசி வாகனம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை கைதுசெய்த தனிப்படை காவலர்களுக்கு, மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.