கோவையில் ரூ.1 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

 

கோவையில் ரூ.1 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

கோவை

கர்நாடகாவில் இருந்து கோவைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள லாரி பேட்டைக்கு, கர்நாடகாவில் இருந்து போதை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோவை மாநகர துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சரக்கு ஆட்டோவில் இருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கோவையில் ரூ.1 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

இதனை அடுத்து, ஆட்டோவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குட்காவை கடத்திய உக்கடம் பகுதியை சேர்ந்த அப்பாஸ் மற்றும் ஜெயினுலாபுதீன் ஆகியோரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் கூட்டம் மிகுந்த லாரிபேட்டை பகுதியில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.