குட்கா உரிமை மீறல் 2வது நோட்டீஸ் வழக்கு… தி.மு.க கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு!

குட்கா உரிமை மீறல் 2வது நோட்டீஸ் வழக்கு… தி.மு.க கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு!

சட்டப் பேரவைக்குள் குட்காவை கொண்டு வந்தது தொடர்பாக உரிமைக்குழு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தி.மு.க தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகும்படி தலைமை நீதிபதி அமர்வு கூறியிருப்பது தி.மு.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தங்கு தடையின்றி குட்கா கிடைப்பதாக குற்றம்சாட்டிய தி.மு.க, சட்டப் பேரவைக்குள் குட்காவை கொண்டு சென்றது. இது அவையின்

குட்கா உரிமை மீறல் 2வது நோட்டீஸ் வழக்கு… தி.மு.க கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு!

மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளது என்று புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உரிமை குழு இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில், ஏற்கனவே வழங்கப்பட்ட குறைபாடுடைய நோட்டீஸை ரத்து செய்தும், புதிதாக திருத்தங்களுடன் நோட்டீஸ் வழங்க அனுமதித்தும் உத்தரவிட்டிருந்தது.

குட்கா உரிமை மீறல் 2வது நோட்டீஸ் வழக்கு… தி.மு.க கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு!

இதைத் தொடர்ந்து சட்டப் பேரவை உரிமைக்குழு கடந்த வாரம் கூடி தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்க முடிவு செய்தது. அதன் படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து தி.மு.க சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. அதில், “தற்போது அனுப்பப்பட்ட நோட்டீசும், கடந்த 2017 ஆகஸ்ட் 28ம் தேதியிட்ட நோட்டீசும், சபாநாயகர் அனுப்பிய ஒரே குறிப்பில் இருந்து வெளிப்படுவது தான். சபாநாயகர் அனுப்பிய குறிப்பில் இருந்து, உரிமை மீறல் பற்றிய கேள்விக்கு, முன்கூட்டியே முடிவு காணப்பட்டுஉள்ளது. அதனால், தற்போது அனுப்பிய நோட்டீசிலும், அதே அடிப்படை தவறு உள்ளது. சட்டசபை கூடும் நேரத்தில், உரிமைக் குழுவை கூட்டிய முடிவில் உள்நோக்கம் உள்ளது.

குட்கா உரிமை மீறல் 2வது நோட்டீஸ் வழக்கு… தி.மு.க கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு!

எனவே, நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டு இருந்தது.
இன்றைக்குள் விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதாலும், சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதாலும் இந்த ரிட் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு முன்பு தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வலியுறுத்தினார். ஆனால், இதை ஏற்க அமர்வு மறுத்துவிட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் முறையிடும் படி தலைமை நீதிபதி அமர்வு தி.மு.க தரப்புக்கு அறிவுறுத்தியது.

குட்கா உரிமை மீறல் 2வது நோட்டீஸ் வழக்கு… தி.மு.க கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு!

சட்டப் பேரவை உதற்போதைய நோட்டீசும், 2017 ஆக., 28ம் தேதியிட்ட நோட்டீசும், சபாநாயகர் அனுப்பிய ஒரே குறிப்பில் இருந்து வெளிப்படுவது தான்.சபாநாயகர் அனுப்பிய குறிப்பில் இருந்து, உரிமை மீறல் பற்றிய கேள்விக்கு, முன்கூட்டியே முடிவு காணப்பட்டுஉள்ளது. அதனால், தற்போது அனுப்பிய நோட்டீசிலும், அதே அடிப்படை தவறு உள்ளது. சட்டசபை கூடும் நேரத்தில், உரிமைக் குழுவை கூட்டிய முடிவில் உள்நோக்கம் உள்ளது. எனவே, நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்