Home ஆன்மிகம் குருப்பெயர்ச்சி…! எங்கு, எப்போது, எப்படி, வணங்கலாம்..?

குருப்பெயர்ச்சி…! எங்கு, எப்போது, எப்படி, வணங்கலாம்..?

குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும் என்பதால்தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.

குருவை ‘தனகாரகன்’ என்றும், ‘புத்திரகாரகன்’ என்றும் சொல்வார்கள். ஒருவருக்கு அனைத்து செல்வங்களும் கிடைத்தாலும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுமை பெறாது. அந்த புத்திர பாக்கியத்தை தருபவராகவும், செல்வச் செழிப்புமிக்கவராக விளங்க வேண்டுமானாலும் குருவின் அருள் வேண்டும். திருமணம் கைகூட வேண்டுமானாலும் இவரின் ஆசி வேண்டும். ஜாதக கட்டத்தில் குருபகவான் அமர்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்து செல்வாக்கு பெற்றவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும் விளங்குவார்.

குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும். குருபரிகார தலங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு பரிகார தலங்கள்! குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் சிறப்பு அர்ச்சனைகள் யாகங்கள் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் இந்த சிறப்பு யாகங்களில் பங்கேற்கலாம். குருப் பெயர்ச்சியன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானாது. வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, முல்லை மலர்களை கொண்டு வணங்கவேண்டும்.

குருவை வணங்குவது எப்படி?

குருவை எல்லா நாளும் வழிபட நல்ல நாளே. குருவுக்குரிய வியாழக்கிழமையும், குருப்பெயர்ச்சி அன்று குருவை நாம் ஒவ்வொருவரும் வழிபடுவதே சிறப்பு.
குருப்பெயர்ச்சி அன்று அதிகாலையில் குளித்து முடித்து நம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அதன்பிறகு, சான்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், குருவாக நம்மை வழிநடத்திச் செல்பவர்களிடம் தொலைபேசி வாயிலாக ஆசி பெறுவது நல்லது. வீட்டில் பூஜை அறையில் குரு படம் வைத்து, முல்லைப்பூ மாலை சூட்டி வழிபடவும்.

நமது ஜாதகத்தில் குரு வரப்போகும் இடத்தைப் பொறுத்து, பெயர்ச்சிக்கு முன்னதாகவோ அல்லது பெயர்ச்சி அன்றோ எப்படி, எப்போது, எங்கு என்பதை அறிந்து கொள்வது நல்லது. எல்லா கிரகங்களையும் வழிபடுவது வழக்கம். குரு பகவான் சுப கிரகம் என்பதால் பெயர்ச்சி அன்று அல்லது அதற்கு முன்பாகவே நமது ஜாதகப்படி யோகபலம் பெற்றநாளில் சென்று வழிபடுவதால், இனி நல்லதே நடக்கும். ‘சனியைச் சாய்வாய் நின்று கும்பிடு’ என்பதைப் போல ‘குருவை நேராய் நின்று கும்பிடு’ என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதிகாலையில் முதன் முதலில் குரு முகத்தில் விழித்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.

எல்லா தெய்வங்களுக்கும் நாம் போகமால், உதவியாளர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். ஆனால், குருவிற்கு மட்டும் தாங்களே சென்று வழிபட வேண்டும். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடஙகும். இல்லையேல் உங்களுக்கு பதில் யார் வழிபட செல்கிறார்களோ அவர்களுக்குதான் அதன் பலன்கள் கிடைக்கும்.

-வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாலியல் வன்கொடுமையால் எச்.ஐ.வி பாதித்த சிறுமி’ : தந்தையே மகளுக்கு செய்த கொடூரம்!

மதுரை அருகே 13 வயது சிறுமியை எச்.ஐ.வி பாதித்த வளர்ப்பு தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி பகுதியை...

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி : ராஜா முத்தையா கல்லூரி மாற்றம்!

ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா கல்லூரியில் அதிக...

சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 536 புள்ளிகள் குறைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு,...

அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,...
Do NOT follow this link or you will be banned from the site!