தனுசு ராசியிலிருந்து இடம்பெயரும் குருபகவான் : ஆலங்குடியில் சிறப்பு பூஜை!

தனுசு ராசியிலிருந்து இடம்பெயரும் குருபகவான் : ஆலங்குடியில் சிறப்பு பூஜை!

குருப்பெயர்ச்சியின் காரணமாக ஆலங்குடி குரு பகவான் தலத்தில் யாகபூஜைகள் நடைபெற்று வருகிறது.

நவகிரகங்கள் வழிபாடு என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக நவகிரகங்களில் முழு சுபகிரகம் என்று சொல்லப்படுபவர் குரு பகவான் ஆவார். இவர் வாழ்க்கையில் செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் இரண்டையும் அளிக்கும் வல்லமை கொண்டவர் என்பது நம்பிக்கை. அத்துடன் ஒருவரின் வாழ்க்கையில் குரு பகவானின் ஆதிக்கம் இருக்குமாயின் அவரது வாழ்வில் எல்லா துறைகளிலும் பிரகாசிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

தனுசு ராசியிலிருந்து இடம்பெயரும் குருபகவான் : ஆலங்குடியில் சிறப்பு பூஜை!

இந்நிலையில் ஐப்பசி மாதம் 30 ஆம் நாளான இன்று குருபகவான் இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இவர் மகர ராசியில் சுமார் ஒரு ஆண்டு வாசம் புரிந்து அருள் அளிப்பார். அடுத்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ஐப்பசி மாதம் 27 ஆம் நாளான சனிக்கிழமை இவர் கும்ப ராசிக்கு இடம் பெயர உள்ளார்.

தனுசு ராசியிலிருந்து இடம்பெயரும் குருபகவான் : ஆலங்குடியில் சிறப்பு பூஜை!

குரு பெயர்ச்சியை ஒட்டி குருபகவானின் பிரசித்தி பெற்ற தலமான ஆலங்குடி குரு பகவான் ஆலயத்தில் அவருக்கு சிறப்பு பூஜைகள் நேற்று இரவு முதல் தொடங்கின. முதற்கட்டமாக முதல் கால பூஜை முடிந்து குருபகவானுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தனுசு ராசியிலிருந்து இடம்பெயரும் குருபகவான் : ஆலங்குடியில் சிறப்பு பூஜை!

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது