“ஹலோ நான் ஜெயில்லேர்ந்து சரக்கடிச்சிக்கிட்டே பேசுறேன்”சிறை கைதிகளுக்கு செல்போன் ,சிம்கார்டு,போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது..

 

“ஹலோ நான் ஜெயில்லேர்ந்து சரக்கடிச்சிக்கிட்டே பேசுறேன்”சிறை கைதிகளுக்கு செல்போன் ,சிம்கார்டு,போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது..

சிறைக்கைதிகளுக்கு கஞ்சா மற்றும் செல்போன், போன்றவைகளை வழங்கியதாக ஒரு சிறை கண்காணிப்பாளரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

“ஹலோ நான் ஜெயில்லேர்ந்து சரக்கடிச்சிக்கிட்டே பேசுறேன்”சிறை கைதிகளுக்கு செல்போன் ,சிம்கார்டு,போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது..

ஹரியானா மாநிலம் குருகிராமில் போண்ட்ஸி சிறையில் கைதிகளிடையே செல்போன் மற்றும் போதைப்பொருட்கள் சரளமாக உலவுவதாக நிறைய புகார்கள் மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது .இதனால் அங்குள்ள கைதிகள் வெளியே உள்ளோரிடம் எந்நேரமும் பேசிகொண்டும் செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டும் ,பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர் .மேலும் போதை பொருட்களை எடுத்துக்கொண்டு எந்நேரமும் போதையில் தள்ளாடியபடியே இருந்ததுடன் சிறைக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டும் இருப்பதாக தகவல் கிடைத்தது .

“ஹலோ நான் ஜெயில்லேர்ந்து சரக்கடிச்சிக்கிட்டே பேசுறேன்”சிறை கைதிகளுக்கு செல்போன் ,சிம்கார்டு,போதைப்பொருள் வழங்கிய சிறை அதிகாரி கைது..இதனால் அங்கு வியாழக்கிழமையன்று மேலதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர் .அப்போது அங்கு கைதிகளுக்கு செல்போன் ,சிம்கார்டு மற்றும் போதைப்பொருள் வழங்கி வந்ததாக சிறை துணை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார் .
மேலும் அதிகாரிகள் அவரின் வீடுகளில் சோதனை நடத்தி 11 4 ஜி சிம்களையும் 230 கிராம் ஹாஷையும் பறிமுதல் செய்தனர்.அவர்கள் கைதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இப்படி சிம்க்கார்டு மற்றும் கஞ்சா போன்றவை வழங்கியதாக சிறை அதிகாரிகள் கூறினார்கள் .மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து துணை சிறை கண்காணிப்பாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .