மூதாட்டியை கொன்ற நெசவு தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

 

மூதாட்டியை கொன்ற நெசவு தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

திருவண்ணாமலை

ஆரணி அருகே மூதாட்டி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான நெசவு தொழிலாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். திருவண்ணாலை மாவட்டம் ஆரணி அருகே ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ராஜேஸ்வரி என்பவர், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டியை கொன்ற நெசவு தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

இதுகுறித்து, கண்ணமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், அதேபகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி கணேசன் என்பவர் கடன்தொல்லை காரணமாக மூதாட்டியை கொன்று எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கணேசனை கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில், நெசவு தொழிலாளி கணேசனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து கணேசன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.