கிடுக்குப்பிடியில் கிஷோர் கே சாமி; குண்டர் சட்டம் உறுதி!

 

கிடுக்குப்பிடியில் கிஷோர் கே சாமி; குண்டர் சட்டம் உறுதி!

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பல பதிவுகளை முகநூலில் பதிவிட்ட கிஷோர் கே சுவாமி மீது புகார் அளிக்கப்பட்டது. அவரை ஜூன் 28-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர்கள், நடிகை ரோகிணி உள்ளிட்ட பலர் குறித்து அவர் அவதூறு பரப்புவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தது.

கிடுக்குப்பிடியில் கிஷோர் கே சாமி; குண்டர் சட்டம் உறுதி!

இதனால், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். அதன் படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கிஷோர் கே சுவாமி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கிஷோர் கே சாமி ஜாமீன் கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவுரை கழகத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது.