ஆன்லைனில் ஆடைகள் வாங்கிய போது 1 லட்சம் ஏமாந்த பெண் -நூதனமுறையில் நடந்த மோசடி

 

ஆன்லைனில் ஆடைகள் வாங்கிய போது 1 லட்சம் ஏமாந்த பெண் -நூதனமுறையில் நடந்த மோசடி

ஒரு பெண் ஆன்லைனில் ஆடைகள் வாங்கியபோது அவரிடம் நூதன முறையில் 1 லட்ச ரூபாய் ஒருவர் மோசடி செய்துள்ளார் .


குஜராத்தின் நவரங்க்புராவைச் சேர்ந்த சர்தார் படேல் ஸ்டேடியம் அருகே லஜ்பத்நகர் சொசைட்டியில் வசிக்கும் 65 வயதான நூதன் விஜ் என்ற பெண் தொழிலதிபர் அங்கு சொந்தமாக ஒரு வியாபாரம் செய்து வருகிறார் .இந்நிலையில் அவர் ஆன்லைனில் தனக்கு தேவையான உடைகளை 2272 ரூபாய்க்கு வாங்கினார் .அப்போது அவற்றில் சில ஆடைகளை திருப்பி கொடுக்க அவர் விரும்பினார் .அதனால் தான் ஆடைகள் வாங்கிய நிறுவனத்தின் விவரங்களை அவர் கூகுளில் தேடி அந்த நிறுவனத்தின் போன் நம்பரை கண்டறிந்தார் .பின்னர் அந்த நிறுவனத்தின் நபருக்கு போன் செய்த போது ராகுல் என்பவர் பேசினார் .அப்போது பேசிய அந்த நபர் அந்த பெண் விஜிடம் தங்களின் கிரெடிட் கார்டு விவரங்களை அனுப்புமாறும் அந்த கார்டுக்கு தாங்கள் பணத்தை திருப்பி அனுப்புவதாகவும் கூறினார் .
அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் விஜ் அவர் அனுப்பிய இணைய தள முகவரியில் தன்னுடைய கிரெடிட் கார்டு மற்றும் சில விவரங்களை அனுப்பினார் .அப்போது அவருக்கு பல கடவு சொற்கள் அவரின் மொபைலுக்கு வந்தது .அந்த எண்களை அவரிடம் அந்த பெண் ஷேர் செய்தார் .பின்னர் அவரின் மொபைலுக்கு 1லட்சம் ரூபாய் தங்களின் அக்கௌன்ட்டிலிருந்து எடுக்கப்பட்டதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது .அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த ராகுலை தொடர்பு கொண்ட போது அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது ,அதனால் அவர் சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

ஆன்லைனில் ஆடைகள் வாங்கிய போது 1 லட்சம் ஏமாந்த பெண் -நூதனமுறையில் நடந்த மோசடி