’ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களில் குஜராத் முதலிடம்- பியூஷ் கோயல் தகவல்

’ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களில் குஜராத் முதலிடம்- பியூஷ் கோயல் தகவல்

ஸ்டார்டப் நிறுவனங்கள் வளர்ச்சியில் குஜராத் மாநிலம் அதிக அக்கறை காட்டி உள்ளதாக வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவான மாநிலங்களில் குஜராத் முன்னிலையில் உள்ளதாகவும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும் அதிக தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

’ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களில் குஜராத் முதலிடம்- பியூஷ் கோயல் தகவல்

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களும் இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளதாகவும், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஸ்டார்ட் அப் வளர்ச்சி அதிக அளவில் உள்ளது என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
நிறுவனங்களுக்கு கிடைக்கும் உதவி, தொழில் தொடங்குவதற்கான வசதி, நிதி திரட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட 30 குறியீடுகளின் அடிப்படையில், இந்த

’ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களில் குஜராத் முதலிடம்- பியூஷ் கோயல் தகவல்

மாநிலங்களில் ஸ்டார்ட்அப் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தொழில் மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக துறையின் கீழ், இந்தியாவில் இதுவரை 36,614 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு கிராம அளவில் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.