• April
    09
    Thursday

Main Area

Main



டிரம்பின் 3 மணி நேர பயணத்துக்கு ரூ.85 கோடி செலவிடும் குஜராத் அரசு

trump
trump

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்.முதலில் அகமதாபாத் செல்லும் அவருக்கு அங்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.அகமதாபாத்தில் தோராயமாக மூன்று மணி நேரம் வரை மட்டுமே டிரம்ப் இருப்பார் என்று கூறப்படுகிறது.இதற்காக குஜராத் அரசு ரூ.80 முதல் 85 கோடி வரை செலவு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

modi


அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி டிரம்ப பயணிக்கும் பாதை நெடுக சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குடிசைப் பகுதிகளை மறைக்க 7 அடி உயரத்துக்கு பெருஞ்சுவர் கட்டப்பட்டுள்ளது. வண்ணமயமான ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

trump wall.jpg1

சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.போலீசார் பாதுகாப்பு,துப்புரவுத் தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து டிரம்ப் வருகைக்காக மட்டும் குஜராத் அரசு ரூ.80-85 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இது குஜராத் மொத்த பட்ஜெட்டில் 1.5 சதவிகிதம் ஆகும். 

trump wall


அகமதாபாத் வரும் டிரம்ப் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியாமான சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தை திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் 1.25 லடசம் மக்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.மோடி அமெரிக்கா சென்றபோது நடத்தப்பட்ட ஹவ்டி மோடிக்கு இணையாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

trump wall.jpg2

இந்த ஸ்டேடியம் திறப்பு விழாவுக்கு சில கோடிகளைக் குஜராத் கிரிக்கெட் வாரியம் செலவு செய்து வருகிறது.இது தவிர, டிரம்ப் வருகை உறுதி செய்யப்பட்ட உடனேயே அகமதாபாத் மாநகராட்சி கோடிக் கணக்கில் செலவு செய்து சாலையை விரிவாக்கம் செய்வது உள்ளிட்டவற்றைச் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

2018 TopTamilNews. All rights reserved.