கொரோனா பாதிப்பு குறைந்தது.. வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு.. குஜராத் அரசு முடிவு..

கொரோனா பாதிப்பு குறைந்தது.. வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு.. குஜராத் அரசு முடிவு..

குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளையும், இளங்கலை மற்றும் முதுங்கலை மாணவர்களுக்காக கல்லூரிகளையும் திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் 2வது அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்தது. தற்போது நாடு முழுவதுமாக தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 40 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. குஜராத் அரசும் அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்தது.. வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு.. குஜராத் அரசு முடிவு..
விஜய் ரூபானி

குஜராத்தில் தற்போது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளையும், இளங்கலை மற்றும் முதுங்கலை மாணவர்களுக்காக கல்லூரிகளையும் திறக்க அனுமதி அளிக்கலாம் என குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்தது.. வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு.. குஜராத் அரசு முடிவு..
பள்ளி

அதேசமயம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கோவிட்-19 வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும். மாஸ் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், சுத்திகரித்தல் உள்பட அனைத்து நிலையான செயல் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் (வகுப்புகளில்) 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியது கட்டாயம் கிடையாது. மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.