“இது கொஞ்சம் புது மோசடி” -ஒரு ரூபாயில் உங்க அக்கௌன்ட் பணம் முழுவதும் ஸ்வாகா…!

 

“இது கொஞ்சம் புது மோசடி” -ஒரு ரூபாயில் உங்க அக்கௌன்ட் பணம் முழுவதும் ஸ்வாகா…!

முதலில் ஒரு ரூபாய் அனுப்ப சொல்லி ,பிறகு நம் அக்கௌன்ட் பணம் முழுவதையும் ஆட்டைய போடும் கும்பலை போலீசார் கைது செய்தார்கள் .

“இது கொஞ்சம் புது மோசடி” -ஒரு ரூபாயில் உங்க அக்கௌன்ட் பணம் முழுவதும் ஸ்வாகா…!

ஜார்கண்டில் உள்ள ஜம்தாராவில் சொஹைல் பதான் என்ற 20 வயது வாலிபரின் தலைமையில் ஒரு மோசடி கும்பல் பல நூற்றுக்கணக்கானோரின் அக்கௌன்ட்டிலிருந்தது பணத்தை திருடுவதாக அஹமதாபாத் போலீசுக்கு புகார்கள் குவிந்த வண்ணமிருந்தன .இதனால் அங்குள்ள ஆறு போலீசார் கொண்ட க்குழுவினர் மாறு வேடத்தில் ஜார்கென்ட்டுக்கு சென்று, அந்த மோசடி கும்பலை கண்காணித்து, அவர்களின் மோசடிகளை கண்டறிந்து அந்த கூட்டத்தினை கைது செய்தார்கள் .அப்போது அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் பலரின் அக்கௌன்ட்டிலிருந்து பணம் திருடும் விதம் புது விதமாக இருந்தது ,இதை நாம் அனைவரும் தெரிந்து கொண்டாலே நாம் அந்த மாதிரி மோசடி கும்பலிடமிருந்து எதிர்காலத்தில் ஏமாறாமல் தப்பலாம் .
அந்த கும்பல் முதலில் ஆன்லைனில் ஒரு ரெஸ்டெரென்ட் விளம்பரம் கொடுத்து அங்கு தள்ளுபடி விலையில் உணவுகளை வீட்டுக்கே டெலிவரி செய்வதாக விளம்பரம் கொடுத்தார்கள் .அந்த விளம்பரத்தை பார்த்து அந்த நம்பருக்கு போன் செய்யும் நபர்களிடம் பணம் வருவதை சோதிக்க முதலில் அவர்களின் அக்கௌன்ட்டிலிருந்து இவர்களுக்கு ஒரு ரூபாய் மட்டும் அனுப்ப சொல்வார்கள் .அதன் பிறகு அவர்களின் தொழில்நுட்பத்தை வைத்து நம் அக்கவுண்டில் இருக்கும் பல ஆயிரங்களை ஆட்டைய போட்டு விடுவார்கள் .அதன் பிறகு அவர்களின் நம்பருக்கு போன் செய்தால் அந்த போன் வேலை செய்யாது
இப்படியாக பலரின் அக்கவுண்டினலிருந்து பல லட்சங்களை திருடியுள்ள அந்த கும்பலின் மோசடிகளை பற்றி ஒரு பெண் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த கும்பல் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“இது கொஞ்சம் புது மோசடி” -ஒரு ரூபாயில் உங்க அக்கௌன்ட் பணம் முழுவதும் ஸ்வாகா…!