65 எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள போராடும் குஜராத் காங்கிரஸ்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் ரிசார்ட்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் மாற்றம்

இம்மாதம் 19ம் தேதியன்று குஜராத்தில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வும், காங்கிரசும் தலா 2 இடங்களை கைப்பற்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த தினங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆக்சே படேல், ஜிது சவுத்ரி மற்றும் பிரிஜேஷ் மெர்ஜா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம் 65ஆக குறைந்தது. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.

நீல் சிட்டி ரிசார்ட்

தற்போதைய நிலவரத்தின்படி, குஜராத்துக்கான ராஜ்யசபா இடங்களில் ஒன்றை மட்டுமே காங்கிரசால் உறுதி வெல்ல முடியும். 2வது இடத்தில் வெற்றி பெற இன்னும் 5 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இந்த சூழ்நிலையில், ராஜ்யசபா தேர்தலுக்கு முன்னதாக மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதற்கான சாத்தியம் உள்ளதாக தகவல் வெளியானது. இது குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு பீதியை கிளப்பியது. இதனையடுத்து கைவசம் உள்ள 65 எம்.எல்.ஏ.க்களையும் தக்க வைத்து கொள்ள என காங்கிரஸ் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது.

எம்.எல்.ஏ. குலாப் சிங் ராஜ்புத்

ராஜ்கோட்டில் உள்ள நீல் சிட்டி ரிசார்ட், வதோதராவில் உள்ள ஏரிஸ் ரிவர்சைடு பண்ணைவீடு மற்றும் ராஜஸ்தானில் உள்ள வைல்ட் விண்ட்ஸ் ரிசார்ட் ஆகிய இடங்களில் இன்று காங்கிரஸ் கட்சி தனது 65 எம்.எல்.ஏ.க்களையும் குழு குழுவாக தங்கவைத்துள்ளதாக தகவல். ராஜ்கோட் ரிசார்ட்டில் மட்டும் 40 எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல். இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. குலாப் சிங் ராஜ்புத் கூறுகையில், ராஜ்யசபா தேர்தலுக்கான யுக்தி குறித்து இங்கு ஆலோசனை செய்ய உள்ளோம். எந்தவொரு எம்.எல்.ஏ.வும் கட்சியை விட்டு விலகபோவதில்லை. மக்களுக்கு விசுவாசமற்றவர்கள்தான் கட்சியை விட்டு வெளியேறினர். மக்களின் ஆணையை மதிக்காமல் கட்சியை விட்டு வெளியேறியவர்களை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

Most Popular

சீதா பிறந்தது நேபாளம்தான்… ராமர் அயோத்தியில்தான் பிறந்தார்! -ராமர் கோவில் டிரஸ்ட் கண்டனம்!

ராமர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது என்றும் அவர் நேபாளி என்றும் கூறிய நேபாள பிரதமர் ஒளிக்கு ராமர் கோவில் கட்டுமான கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ள அயோத்தி...

பெங்களூரு ஊரடங்கு… ஓசூர் எல்லையில் குவிந்த தமிழர்கள்!

பெங்களூருவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசித்து வந்த தமிழர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப ஓசூர் எல்லைக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கர்நாடகாவில் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. பெங்களூரு...

‘மக்காளாட்சி மாண்பைக் குலைக்கும்’ தேர்தல் சட்டத் திருத்தம் பற்றி வைகோ கருத்து

அரசுத் துறை நிறுவனங்களில் தனியாரை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்துக்கொண்டே இருக்கிறது. சமீப்த்தில் தேர்தல் நடத்தும் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து எதிர்கட்சிகள் குரல்...

“சானிடைசரால் வைரசை எரிக்க சொன்னா ,காதலி முகத்தையா எரிப்பாங்க?”- கடன் தர மறுத்த காதலிக்கு நேர்ந்த கதி ..

சண்டிகரில் தனது காதலியிடம் 2000 ரூபாய் கடன் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் அவரின் முகத்தில் கை கழுவும் சானிடைசரை கொட்டி தீவைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. சண்டிகார் மாநிலம் ஷில்லாங்கில் நரேஷ் மற்றும் தாமினி...
Open

ttn

Close