10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பலர் கருத்து தெரிவித்தனர். அதனால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் மறுசுழற்சி முறையில் உபயோகிக்க கூடிய மாஸ்க் வழங்க வேண்டும் என்றும் வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டாம் என்றும் அவர்களை நேரடியாக தேர்வு எழுத அனுமதிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும் என்றும் மாணவர் விடுதிகளை தேர்வு முடியும் வரை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close