“ரூ.2,000 பெற வேண்டுமா?” இதை உடனே செய்யுங்க: விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

“ரூ.2,000 பெற வேண்டுமா?” இதை உடனே செய்யுங்க: விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.2,000 பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

“ரூ.2,000 பெற வேண்டுமா?” இதை உடனே செய்யுங்க: விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். ஆண்டுக்கு ரூ.6,000 என்ற வீதத்தில் கொடுக்கப்பட்டு வரும் நிதியுதவியின் மூன்றாவது கட்ட பணம் தற்போது டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் போடப்பட்டு வருகிறது.

“ரூ.2,000 பெற வேண்டுமா?” இதை உடனே செய்யுங்க: விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்த திட்டத்திற்கு விளை நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட உயர்பதவியில் இருப்பவர்களும் மாதத்திற்கு ரூ.10,000க்கும் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்த திட்டத்தின் 6ம் கட்ட நிதியுதவி கடந்த மாதம் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில், பலருக்கு பணம் வந்திருக்கிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது. அதற்கு, https://pmkisan.gov.in/ இந்த இணையதள முகவரிக்கு சென்று ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்தால் பணம் வந்துவிட்டதா என்பது தெரிய வரும்.

“ரூ.2,000 பெற வேண்டுமா?” இதை உடனே செய்யுங்க: விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

7ம் கட்ட தவணை பணம் இம்மாத இறுதியிலும் டிசம்பர் மாதத்திலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 6ஆவது தவணையை கொடுக்கப்படாத விவசாயிகள், விண்ணப்ப படிவத்தில் இருக்கும் தவறை சரி செய்யாவிட்டால் 7ஆவது தவணை பணமும் கொடுக்கப்படாதாம். இந்த திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த அதிகாரியை அணுகி பொதுச் சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

“ரூ.2,000 பெற வேண்டுமா?” இதை உடனே செய்யுங்க: விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

கிசான் திட்டத்தின் வலைதள பக்கத்திலும் விவசாயிகள் பதிவு செய்யலாம். ஆதார் கார்டு, ஜன தன் வங்கி கணக்கு, குடியுரிமை சான்றிதழ், நிலத்தின் ஆவணங்கள் ஆகியவற்றின் விவரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் ஏற்கனவே வைத்திருக்கும் கணக்குகளின் விவரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியுமாம்.