“மன அழுத்தத்தில் காவலர்கள் தவறு செய்துவிட்டனர்” : நீதிபதியை தரக்குறைவாக பேசியது குறித்து அரசு தரப்பில் விளக்கம்!

அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை கொரோனா காலக்கட்டத்திலும் போராட்டத்தில் குதித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி முதலில் பென்னிக்ஸ் இறந்தார். மறுநாள் ஜெயராஜ் உயிரிழந்தார். அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்த சம்பவத்துக்கு சாத்தான்குளம் போலீசார்தான் காரணம் எனக்கூறி வியாபாரிகள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்தனர். காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை கொரோனா காலக்கட்டத்திலும் போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்கக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்றம் பதிலளித்தது. நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.

நேற்று கோவில்பட்டி கிளைச்சிறையில் நடைபெற்ற விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசியதாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் ஆகிய 3 பேர் மீது அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்கள் இன்று மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனிடையே நீதிபதியை அவமதித்து பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று நீதிபதியை ஒருமையில் பேசிய வழக்கில் காவலர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ள உயர்நீதி மன்ற மதுரைகிளை சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளை மாஜிஸ்திரேட்டிடம் காவலர்கள் அவமரியாதையாக நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தது. இது குறித்து விளக்கமளித்த அரசு தரப்போ , மன அழுத்தத்தில் காவலர்கள் தவறு செய்துவிட்டதாக உயர்நீதிமன்ற கிளையில் விளக்கம் அளித்தனர்.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...