ஜி.எஸ்.டி., வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் – த.மா.கா., இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா வேண்டுகோள்!

 

ஜி.எஸ்.டி., வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் – த.மா.கா., இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா வேண்டுகோள்!

ஈரோடு செப்-01 மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும், என த.மா.கா., இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஊரடங்கு காரணமான பலர், பணியை இழந்தும், ஊதியம் கிடைக்காமலும், வருவாயை இழந்துள்ளனர். இந்த நிலையில், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகர்களுக்கு ஜிஎஸ் டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிடுள்ளார். மார்ச், 15 முதல், ஆகஸ்ட் 31 வரை அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு ரத்து செய்திருந்தது. ஊரடங்கு தளர்வால், தற்போதுதான் மக்கள் பணிக்கு திரும்புகின்றனர். எனவே, இன்னும் மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.,யில் வரி விதிப்பு வழங்க வேண்டும். இதன் மூலம், பொருட்களின் விலை குறைந்து மக்களுக்கான செலவினம் குறையும் என யுவராஜா கூறியுள்ளார். -ரமேஷ் கந்தசாமி