கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு : கமல் ஹாசன் கோரிக்கை!

 

கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு : கமல் ஹாசன் கோரிக்கை!

கொரோனா மருந்துகளுக்கு ஜிஸ்டி விலக்கு தேவை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு : கமல் ஹாசன் கோரிக்கை!

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி, மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு விதிக்கப்படும் 12 சதவீத வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்படும் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது தொடர்பாக அமைத்துள்ள குழுவில் பல்வேறு மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு : கமல் ஹாசன் கோரிக்கை!

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன், “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெருந்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள்,உபகரணங்கள் உள்பட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்களிக்கத்திருக்க வேண்டும்.உடனே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது.பரிந்துரைக்குழுவினை உருவாக்கி இருப்பது அதிருப்தியளிக்கிறது” என்றுகுறிப்பிட்டுள்ளார்.