ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்? – செப்.17ஆம் தேதி முடிவு?

 

ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்? – செப்.17ஆம் தேதி முடிவு?

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் முக்கியக் காரணியாக இருக்கின்றன. அவர்களிடம் அதிக வளம் இருப்பதாலும் உலக நாடுகளில் தேவை அதிகமாக இருப்பதாலும் விலையை ஏற்றுகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் நம் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் வரியும் முக்கியப் பங்குவகிக்கிறது. அதனால் தான் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் இந்தியாவில் குறைந்தபாடில்லை. அவற்றின் மீது விதிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு குறைக்க முடியாது என பிடிவாதம் செய்கிறது.

ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்? – செப்.17ஆம் தேதி முடிவு?

ஆனால் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் மக்களின் வலியறிந்து வாட் வரியைக் குறைப்பை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் பெரும்பாலான மாநிலங்கள் மத்திய அரசைப் போலவே குறைக்காமல் இருக்கின்றன. இதனால் அவற்றின் விலை சதத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. டீலர்களின் கமிஷன், பெட்ரோல்,டீசல் கொண்டுசெல்ல ஆகும் போக்குவரத்துச் செலவும் விலையேற்றத்திற்கு ஒருவகை காரணமாக அமைகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முழங்க, மத்திய அமைச்சர்களோ வெவ்வேறு விளக்கங்களைச் சொல்லி வருகின்றனர்.

ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்? – செப்.17ஆம் தேதி முடிவு?

எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக எழுப்பி வருகின்றனர். இந்தக் கோரிக்கை இப்போது தான் மத்திய அரசின் காதில் ஒலித்திருக்கிறது போலும். ஆம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நாளை மறுநாள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடுகிறது. அதில் இதுதொடர்பாக முக்கிய முடிவெடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.