லாக்டவுன் தளர்வால் மீண்டும் பணத்தை கொட்ட தொடங்கிய ஜி.எஸ்.டி…. ஜூனில் மட்டும் ரூ.90,917 கோடி வசூல்…

பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதனால் ஜி.எஸ்.டி. வருவாய் நினைத்து பார்க்காத அளவுக்கு அதாள பாதாளத்தில் வீழ்ந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.32,294 கோடி மட்டுமே அரசுக்கு கிடைத்தது.

லாக்டவுன் தளர்வு

இதற்கிடையே கடந்த மே மாதத்தில் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. இதனால் கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.62,009 கோடியாக உயர்ந்தது. கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு அன்லாக் 1.0 அறிவித்தது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் கொஞ்சம் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. இதன் விளைவாக ஜி.எஸ்.டி. வசூல் முந்தைய மாதங்களை காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே கடந்த ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.90,917 கோடி வசூலாகியுள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிட்டால் ஜி.எஸ்.டி. வசூல் 9 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மாதத்தில் இந்த அளவுக்கு ஜி.எஸ்.டி. வசூலானது மத்திய அரசுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.

ஜி.எஸ்.டி.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி. வரி நம் நாட்டுக்கு புதியது என்பதால் அதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளை களைந்து வருகிறது.

Most Popular

“அழகா இருக்கோம்ங்கிற திமிர்ல ஆட்டம் போடுறியாடி “தனுஷ் படம் போல நடந்த காதல் கலவரத்தை பாருங்க சாமி ..

ஒரு இளம் பெண்ணை ஒரு தலையாக காதலித்த ஒரு வாலிபர் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணின் தாயாரை அடித்து கொலை செய்துள்ளார் .காதலியை அடித்து காயப்படுத்தினார் . உத்திரபிரதேச மாநிலம்...

சென்னையிலிருந்து மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டது!

லெபனான் நாட்டின் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் வெடித்து 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் கரூர் நிறுவனத்தின் 740 மெட்ரிக்...

பழம்பெரும் பாடலாசிரியர் பி. கே. முத்துசாமி காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி. கே. முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. 'வெண்பா கவிஞர்' எனப் போற்றப்படும் பி. கே. முத்துசாமி 1958 இல்...

“இன்னும் ஒரு மணி நேரத்துல உன் பக்கத்துல இருப்பேன் “காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மரணமடைந்த காதலன் -காதலர்களின் கனவை கலைத்த கோழிக்கோடு விமான விபத்து..

கோழிக்கோடு விமான விபத்து பலரின் கனவுகளை சிதைத்துள்ளது .ஆம் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த இளம் காதலர்களை காதலர் விபத்தில் மரணமடைந்தால் அவர்களின் காதல் கனவு கருகியது . கேரள மாநிலத்தில் உள்ள ஒரு...