கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு!

 

கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு!

கோவை

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக, ஜி.எஸ்.சமீரன் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த ராசாமணி, சட்டமன்ற தேர்தலின்போது இடமாற்றம் செய்யப்பட்டு, நாகராஜன் ஐஏஎஸ் ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன் புதிதாக நியமனம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு!

இதனை தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சமீரன், முன்னாள் ஆட்சியர் நாகராஜனிடம் இருந்து முறைப்படி பொறுப்புகளை பெற்று கொண்டு, அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு, பதவியேற்று கொண்டார். 2012ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜி.எஸ்.சமீரன், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பும், டெல்லி தேசிய சட்ட பல்கலை.யில் முதுகலை பட்டயமும் பெற்றுள்ளார்.

ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தொற்று விகிதத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், ஊரக பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்துள்ள நிலையில், கூடிய விரைவில் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்க்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.