ஆயிரம் விளக்கில் பிரகாசிக்கும் குஷ்பு : பெருகும் ஆதரவால் விழிபிதுங்கும் திமுக?!

 

ஆயிரம் விளக்கில் பிரகாசிக்கும் குஷ்பு : பெருகும் ஆதரவால் விழிபிதுங்கும் திமுக?!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை குஷ்பு. 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த இவருக்கு அவரது ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடினர்.இவர் இயக்குனர் சுந்தர்.சி.யை திருமணம் செய்துகொண்டு இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் அரசியல் பக்கம் தனது கவனத்தை செலுத்தியது 2010. 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு 2014-இல் அக்கட்சியை விட்டு விலகி விலகினார் . 2014 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் தனது பணியை செய்து வந்தார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை குஷ்பு திடீரென கடந்த அக்டோபர் மாதம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆயிரம் விளக்கில் பிரகாசிக்கும் குஷ்பு : பெருகும் ஆதரவால் விழிபிதுங்கும் திமுக?!

திமுக, காங்கிரஸ் என கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் பணியில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்புக்கு இரண்டு கட்சிகளிலும் கிடைக்காத வாய்ப்பு பாஜகவால் கிடைத்துள்ளது. அதுதான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு.கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்புக்கு முதல்முறையாக கிடைத்துள்ள இந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என நினைத்து உழைத்து வருகிறார். குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் குறி வைத்துள்ளது மாணவர்கள். மற்றும் பெண்களை தான்.

ஆயிரம் விளக்கில் பிரகாசிக்கும் குஷ்பு : பெருகும் ஆதரவால் விழிபிதுங்கும் திமுக?!

ஆயிரம் விளக்கு தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கிறார்கள் .நடிகை குஷ்புவும் இஸ்லாமியர் என்பதால் அங்குள்ள பெண்களிடம் குஷ்புவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அத்துடன் குஷ்பூ வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் ஆதரவை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறப்படுகிறது . ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகள் பெயரில் ஒரு லட்சம் டெபாசிட் செய்யப்படும், இஸ்லாமிய பெண்கள் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் உள்ளிட்ட குஷ்புவின் அரசியல்வாதிகள் சிலர் அப்பகுதி பெண்களை கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயிரம் விளக்கில் பிரகாசிக்கும் குஷ்பு : பெருகும் ஆதரவால் விழிபிதுங்கும் திமுக?!

அத்துடன் மக்களை எளிமையான முறையில் வீடு வீடாக சென்று சந்தித்து வரும் அவர் டீக்கடையில் தேனீர் போடுவது, உணவகத்தில் தோசை சுடுவது என மற்ற வேட்பாளர்களைப் போல சில உத்திகளை கையில் எடுத்துள்ளார். தாராபுரம், ஆயிரம்விளக்கு தொகுதி, கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மூன்று தொகுதிகளும் பாஜகவின் டார்கெட். இந்த மூன்று தொகுதிகளில் எப்படியேனும் வெற்றி பெற்று விட வேண்டும் என டெல்லியில் இருந்து பாஜக தலைவர்கள் பலரும் தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயிரம் விளக்கில் பிரகாசிக்கும் குஷ்பு : பெருகும் ஆதரவால் விழிபிதுங்கும் திமுக?!

அத்துடன் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஸ்டாலின் ஆட்கள் வீட்டில் கல்லெறிந்தனர்; சேலையை பிடித்து இழுத்தனர் என்றும் ஜெயலலிதா வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்தது போல நானும் சந்தித்து இருக்கிறேன் என்றும் கூறினார். இந்த செண்டிமெண்ட் பேச்சால் ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு காண வரவேற்பு அதிகரித்துள்ளது என்று தெரிகிறது. அதேசமயம் குஷ்புவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தங்களின் பரப்புரையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளனர் என்றும் கூறுகிறார்கள் பாஜகவினர்.