சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு!

 

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு!

சென்னையில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில் தான் இருக்கின்றனர். இதனால் அங்கு சிகிச்சை அளிக்க தட்டுப்பாடு நிலவுவதால், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் சென்னை முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்க முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்கள் கூடுதலாக சென்னையில் பல்வேறு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு!

சென்னையில் மொத்தமாக 18,693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் மட்டுமே 3,388 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து.உத்தரவிட்டுள்ளார். அந்த குழுவில், அமைச்சர் ஜெயக்குமார், உதய குமார், காமராஜ், எம்.ஆர் விஜய பாஸ்கர் மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.