லாக்டவுனை தளர்த்தியும் ஜி.எஸ்.டி. வருவாய் உயரவில்லை… ஜூலையில் ரூ.87,422 கோடி மட்டுமே வசூலானது…

லாக்டவுனை தளர்த்தியும் ஜி.எஸ்.டி. வருவாய் உயரவில்லை… ஜூலையில் ரூ.87,422 கோடி மட்டுமே வசூலானது…

பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதனால் ஜி.எஸ்.டி. வருவாய் நினைத்து பார்க்காத அளவுக்கு அதாள பாதாளத்தில் வீழ்ந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.32,294 கோடி மட்டுமே அரசுக்கு கிடைத்தது.

லாக்டவுனை தளர்த்தியும் ஜி.எஸ்.டி. வருவாய் உயரவில்லை… ஜூலையில் ரூ.87,422 கோடி மட்டுமே வசூலானது…

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு சிறிது தளர்த்தியது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. இதனால் கடந்த மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.62,009 கோடியாக உயர்ந்தது. கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு அன்லாக் 1.0 அறிவித்தது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.90,917 கோடி வசூலானது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மாதத்தில் இந்த அளவுக்கு ஜி.எஸ்.டி. வசூலானது மத்திய அரசுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.

லாக்டவுனை தளர்த்தியும் ஜி.எஸ்.டி. வருவாய் உயரவில்லை… ஜூலையில் ரூ.87,422 கோடி மட்டுமே வசூலானது…

சரி இனி அடுத்து வரும் மாதங்களில் ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் ரூ.1 லட்சம் கோடிக்கு குறைவில்லாமல் வந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த ஜூலையில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.87,422 கோடி மட்டுமே கிடைத்தது. லாக்டவுனை விதிமுறைகளை தளர்த்திய பிறகும் ஜி.எஸ்.டி. வசூல் குறைந்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் கவலை அளித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.